Ads Top

Diary movie review டைரி திரைப்பட விமர்சனம்

டைரி: ஊட்டி மலைக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு கொண்டைஊசி வளைவில் தொடர்ந்து நிகழும் மர்ம விபத்துகளின் காரணம் தெரியாமல் குழம்பி வரும் காவல் துறை இதை கிடப்பில் போடுகிறது. இந்த வழக்கை புதிதாக பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வரதன் (அருள்நிதி) தன் கையில் எடுத்து விசாரிக்க தொடங்குகிறார். இந்த வழக்கின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கப்பட்டனவா? என்பதே படத்தின் கதை. 

அருள்நிதி வழக்கம் போல் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த படத்தின் பிளஸ் என்று பார்க்கும் போது, ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. குறிப்பாக இரவு நேர பேருந்து பயணத்தை விரும்புபவர்களுக்கு இது நிச்சயம் ஒரு விருந்தாகவே இருக்கும். ஒளிப்பதிவாளர் நம்மையும் பேருந்தில் அழைத்து சென்றுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் பின்னணி இசை வலு சேர்த்து இருக்கிறது. இந்த படத்தில் பெரிதாக எந்த அழுத்தமோ பயமோ இல்லாமல் நிம்மதியாக பார்க்க முடிந்தது. வழக்கமாக பயமுறுத்தும் வில்லன், ஹீரோவுக்கு நிறைய தடங்கல்கள் போன்ற விஷயங்கள் இல்லாமல் இருந்தது மகிழ்ச்சி. அங்கங்கே சில லாஜிக் மிஸ் ஆனாலும். இந்த பயணம் எப்படியோ இலக்கை அடைய இயக்குனர் சில முயற்சிகளை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். வழக்கமான பயணிகளின் டெம்ப்ளட்டை இந்த படத்தில் புகுத்தி இருந்தாலும் .ஒரு அரசு பேருந்தில் இரவு நேரத்தில் எப்படி இருக்குமோ அதே போல காட்டி இருக்கும் இயக்குனர் பாராட்டுக்கு உரியவர். ஏனோ பேருந்தை தவிர்த்து வரும் மற்ற கதாபாத்திரங்கள் பெரிதாக மனதை கவரவில்லை. இருப்பினும் அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர் அருமையான கிளைமாக்ஸ் காட்சிகளை கொண்ட இந்த திரைப்படம், வார இறுதியில் நிச்சயம் ஒரு முறை பார்க்க வேண்டிய திரைப்படம்.
Powered by Blogger.