Ads Top

Captain Tamil Movie Review | கேப்டன் திரைப்பட விமர்சனம்

கேப்டன்: சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா,சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம். மிருதன், டிக் டிக் டிக் போன்ற வித்யாசமான படங்களை இயக்கி ஹாலிவுட் கதை அம்சத்தை நமக்கு ஏற்றார் போல கொடுத்தவர் சக்தி சௌந்தர் ராஜன். இந்த வரிசையில் இந்த கேப்டன் படமும் அமைந்துள்ளது. இந்திய ராணுவ கேப்டனாக வரும் ஆர்யா தன்னுடைய சக குழுவினருடன் நட்போடு இருப்பதோடு அவர்களை தன் குடும்பமாக நினைத்து நாட்டிற்கு சேவை செய்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் ஏரியா 42 எனப்படும் இந்தியா நேபால் நாடுகளுக்கு இடையில் உள்ள மனித நடமாட்டம் இல்லாத ஒரு காட்டு பகுதிக்குள் ராணுவ தலைமை இவர்களை அனுப்பிவைக்கிறது.




அந்த காட்டிற்கு செல்லும் ஆர்யா குழுவினர் ஒரு கட்டத்தில் தங்கள் குழுவில்  உள்ள ராணுவீரரால் திடீர் தாக்குதலுக்கு ஆட்படுகின்றனர். இவர்களை தாக்கிவிட்டு அவரும் தற்கொலை செய்து கொள்கிறார். இதை ஆர்யா மற்றும் அவரது குழுவால் ஏற்க முடியவில்லை. இருப்பினும் ராணுவம் அந்த அதிகாரியை தேச துரோகியாக கருதுகிறது. இதை மறுக்கும் ஆர்யா இறந்த தன் நண்பரின் பெயரில் உள்ள களங்கத்தை துடைத்தாரா அந்த காட்டில் உள்ள மர்மம் என்ன? இந்த கேள்விகளுக்கு விடையாக இந்த படத்தின் கதை நகர்கிறது


சிம்ரன் இதில் ஒரு தனியார் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக வருகிறார். அவரது வேலையையும் ஆர்யாவே செய்கிறார். சில நேரங்களில் நம்மை பயமுறுத்த சில கதைகளை சொல்கிறார். ஆர்யா எதோ பொம்மையோடு விளையாடுவது போலும், சிம்ரன் விலங்குகள் நல மருத்துவர் போல காட்சிகள் இருந்தது. குறைவான கதாபாத்திரங்களை வைத்து இது போன்ற கதையை எப்படி எடுக்க முடிந்தது என்பது தான் வியப்பு!


ராணுவமும் அந்த உயிரினங்களுக்கான இந்த போர் மெய்சிலிர்ப்பூட்டும் சண்டைக்காட்சிகளோ, புதிய தொழில் நுட்பம் அல்லது ஆராய்ச்சி தகவல்கள் எதுவும் இல்லாமல் நாம் முன்பே பார்த்த விஷயங்களை எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல், இது போன்ற வேறு வகை உயிரினங்களை பார்க்கும் போது ஏற்படும் பதட்டமும் ஏற்படாமல் பார்த்து கொண்டார் இயக்குனர்.

நிதி பற்றா குறை, திரைக்கதையில் வலுசேர்க்கும் அம்சங்கள் இல்லாமை மேலும் தரம் குறைவான விசுவல் எபக்ட்ஸ் போன்ற காரணங்களோடு எந்த ஒரு திருப்பு முனையும் இல்லாமல் எதோ கடமைக்கு எடுத்தார் போல உள்ள இந்த கேப்டன் வீண் முயற்சி போல போய்விட்டதே, என்று யோசிக்க வைப்பதோடு, இந்த படத்தில் நம் உணர்ச்சியோடு கலந்து கதையை கொண்டு செல்ல சந்தர்ப்பம் இருந்தும் இயக்குனர் ஏனோ அதை முழுமையாக செய்யவில்லை என்று தான் தோன்றியது. இருப்பினும் இதில் ஒரு ஆழமான கருத்து அடங்கி உள்ளது.அதர்க்காக அந்த நல்ல நோக்கத்திற்காக இதை ஒரு முறை பார்க்கலாம்

Powered by Blogger.