வெந்து தணிந்தது காடு | Vendhu Thanithathu Kaadu Movie Review | T.R Silambarasan
வெந்து தணிந்தது காடு: கெளதம் வாசுதேவன் இயக்கத்தில் சிலம்பரசன் நாயகனாக நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்பட விமர்சனம். மிகுந்த எதிர்பார்ப்போடு இந்த படத்தை பார்க்க பெரும்பாலானோர் வந்து இருந்தனர். ஆரம்பத்தில் கிராமத்தில் முள் மரங்களை வெட்டும் பணியாளராக வரும் முத்து (சிலம்பரசன்) ஒரு சிறிய பிரச்சனையில் சிக்கி ஊரை விட்டு வெளியேற எந்த ஒரு பெரிய கட்டாயமும் இல்லாமல் தனது தாயால் (ராதிகா) தனது உறவினர் ஒருவருடன் மும்பைக்கு அனுப்ப முடிவெடுக்கிறார்.
அந்த உறவினர் தற்கொலை செய்து
கொள்கிறார். எந்த பதற்றமும் இல்லாமல் அவரது துப்பாக்கியை எடுத்து கொண்டு சிலம்பரசன்
மும்பைக்கு செல்ல தயாராவதோடு, ராதிகாவும் கடன் தீர்ந்தால் போதுமென இவரை வழியனுப்பி
வைக்கிறார். இந்த பகுதியில் ரகுமான் இசை தாமரை இலை நீர் போல இருந்தது. இந்த கிராமத்து காட்சிகள்
நம் உணர்வோடு ஒட்டாமல் இருந்தாலும் சிம்பு அவரது தோற்றதால் எப்படியோ
அதை நகர்த்திவிட்டார் என்று தான் சொல்லமுடியும்
![]() |
Win Free Tickets: Like, Share and Follow madrasdeals.info Insta page and website. Also share this post in your WhatsApp status, Instagram, also tag minimum 3 friends. DM us to get free tickets. Terms and Conditions applicable
மும்பையின் அந்த நெரிசலான நகர
காட்சிகள் இயல்பாக எடுத்தது பெரிய பலமாகவும் நமக்கும் கதையோடு சற்று ஒன்ற உதவியாக இருக்க
முயற்சிக்கும் போது ரகுமான் அதை தடுத்துவிட்டார்.
பாடல்கள் நன்றாக இருந்தாலும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கவில்லை கதையோடு சேரவும்
இல்லை. அந்த பரோட்டா கடை, அப்பு குட்டி கதாபாத்திரம் சொல்லும் கதைகள் எதுவும் பிற்பகுதியில்
வரும் வில்லன் கதாபாத்திரங்கள் பூர்த்தி செய்யாமல் கதாநாயக துதி பாடியதால் சுவாரசியம்
இல்லாமல் போய் விட்டது.
தனி நபரையே மையப்படுத்தி, அவரையும்
எதிர்மறையான கதாபாத்திரமாக காட்டி இன்னும் பல குப்பைகளை புகுத்தி இதற்கு தன்மான உணர்வு
தான் அடிப்படை காரணம் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியதாக இருந்தது. சில காட்சிகள்
நன்றாக இருந்தாலும் அடிப்படை சரி இல்லாமல், எந்த ஒரு நேர்மறை காரணமும் இல்லாத நாயகன்
கதாபாத்திரம் தான்தோன்றியாக செயல்படுவது போல கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.
நிறைய பழைய மற்றும் சற்று முன்பு
வந்த படங்களின் சாயல் இருந்தது. இருப்பினும் சிம்பு எப்படியோ சமாளித்துள்ளார். அப்பு
குட்டி , சிட்தி இதனானி கதைக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். மற்ற கதாபாத்திரங்கள் அப்படி
அமையவில்லை. சண்டை காட்சிகள் நன்றாக இருந்தது, ஆனால் இன்னும் கூட சிறப்பாக இருந்து
இருக்கலாம்
சிட்தி இதனானி தன்னுடைய இயல்பான
நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார். சமூக விரோதி கூட பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள்
ஆனால் இந்த சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காட்டி இருக்கிறார் இயக்குனர்.
நடக்கும் நிகழ்வுகள் அப்படிதான் இருக்கிறது. சண்டை காட்சிகளை எடுப்பது போல் காதல் காட்சிகளை
எடுத்தது ஒன்றவில்லை. எதோ அவசர கதியில் எடுத்து போல் இருந்து சில காட்சிகள்
சிறப்பான திரைக்கதையோ விறுவிறுப்பான
காட்சி அமைப்போ அல்லது நியாமான எந்த காரணமும் இல்லாமல் கதாநாயகனை மட்டும் நம்பி, வலுவிழந்த
பின்னணி இசை, துதி பாடும் வில்லன் பாத்திரங்கள், பொறுப்பில்லா அன்னை, அப்பாவி காதலி,
சமூக சீர்கேடுகள் நிறைந்த இந்த படம் வேகாத மும்பை பரோட்டா ஒட்டாத சால்னா. சிம்புவுக்காக அல்லது மும்பையை பார்க்க நினைப்பவர்கள்
இந்த படத்தை பார்க்கலாம்
வெந்து தணிந்தது காடு-அரை வேக்காடு

.jpg)