ட்ரிகர் | Trigger Movie Review | Atharvaa
ட்ரிகர்:
சாம் அன்டன் இயக்கத்தில் அதர்வா
முரளி நடிப்பில் ஜிப்ரான் இசையில் வெளிவந்த திரைப்படம்
ட்ரிகர். அருண் பாண்டியன் , சீதா,
சின்னி ஜெயந்த், தான்ய ரவிச்சந்திரன் முனிஷ் காந்த உட்பட நிறைய தெரிந்த நடிகர்கள் இந்த
படத்தில் நடித்துள்ளனர்
காவல் துறை அதிகாரியாக வரும்
அதர்வா ஒரு கட்டத்தில் பணியில்
இருந்து நீக்க படுகிறார். பிறகு
அவரை காவல்துறை கமிஷனர் அழகம் பெருமாள் ஒரு
ரகசிய உளவு பிரிவில் இணைக்கிறார்.
ஒரு உணவத்தில் வேலைபார்ப்பது போல் சக காவலர்களை
கண்காணிப்பது அவரது வேலை. அவருடன்
சின்னி ஜெயந்த், முனீஷ்காந்த் மற்றும் நிஷா பணியாற்றுகின்றனர்
இப்படி
இருக்க ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து
அவர்களை கடத்தி வெளிநாட்டில் விற்று
பணம் சம்பாதிக்கும் வில்லனால் இவர்கள் குடும்பம் பாதிக்க
படுகிறது. குழந்தைகளை மீட்டு வில்லனை கண்டுபிடித்தாரா
என்பது போல் நகர்கிறது கதை.
சண்டைக்காட்சிகளில் நிறைய உழைத்திருக்கிறார் அதர்வா. அதை நன்கு படமாக்கிய ஒளிப்பதிவாளர்
கிருஷ்ணன் வசந்த் மற்றும் எடிட்டர் ரூபன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
சண்டை காட்சியில் உள்ள பரபரப்பு திரைக்கதையில்
சற்று குறைவாக இருந்ததால் சுவாரசியம்
இல்லாமல் போனது. தேர்ந்த நடிகர்களை
இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். இந்த படத்திலும் வலுவில்லா
வில்லன் கதாபாத்திரம் நாயகன் துதி பாடி
கதையை கோட்டை விட்டது இயக்குனரின்
கவனக்குறைவு.
அதர்வா, சின்னி ஜெயந்த் காட்சிகள் முரளி அவர்களை நினைவுக்கு கொண்டு வந்தது. சின்னி ஜெயந்த் மற்றும் முனீஷ் காந்த, சீதா போன்ற நடிகர்களை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். கிளைமாக்ஸில் அருண் பாண்டியன் காட்சிகள் நன்றாக இருந்தது. தான்யா ரவிச்சந்திரன் அவரது வேலையை செய்துள்ளார். திரைக்கதையில் கவனம் செலுத்தி இன்னும் சுவாரஸ்யம் கூட்டி இருந்தால் தரமான படமாக அமைந்திருக்கும். ட்ரிகர் ஒரு மழை கால கச்சேரி

