Cobra Movie Review | கோப்ரா திரைப்பட விமர்சனம்
கோப்ரா திரைப்பட விமர்சனம்
விக்ரம்
நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்
வெளியான திரைப்படம். உலக தலைவர்கள் மற்றும்
யாரும் நெருங்க முடியாத அளவில்
உச்ச கட்ட பாதுகாப்பில் இருக்கும்
தலைவர்களை பணத்திற்காக கொல்லும் கூலிப்படை காரனாக விக்ரம்(மதியழகன்)
நடித்துள்ளார். அவரின் நடிப்பு வழக்கமாக உள்ளதை போல் சிறப்பாவாகவே
இருந்தது.
மாறுவேடம்
தரித்து சமயத்திற்கு தகுந்தாற்போல் கொல்வது
மற்றும் இக்கட்டான சூழலில் இருந்து தப்புவது
போன்ற காட்சிகள் எடுக்க பட்டிருந்தாலும் பெரிய
அளவில் ரசிக்கும் படி இல்லை. இது
போன்ற விஷயங்களை கையாளும் போது இன்னும் சிந்தித்து
எடுத்து இருக்கலாம். கதாநாயகனுக்கு தடையாக வரும் இன்டர்போல்
அதிகாரி கதாபாத்திரத்தில் இர்பான் பதான் பொருந்தி
இருந்தாலும் அவரின் பங்கு திரைக்கதையில்
பெரிதாக இல்லாதது வருத்தமே. அவரை நன்கு பயன்
படுத்தி இருக்கலாம். ஏ.ஆர்.ரகுமான் இசையோடு ஸ்ரீநிதி அவர்களின்
காதல் காட்சிகள் திரையரங்கில் நல்ல தாலாட்டை அமைந்தது
காதல் காட்சிகள் மற்றும் கதாநாயகனுக்கு விசிறிகள்
போல் ஒப்பேற்றும் காட்சிகள் தவிர்த்து திரைக்கதையின் சுவாரஸ்யத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மீனாட்சி கோவிந்தராஜன் சிறப்பாக நடித்திருந்தாலும்
அது படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக கதையின் போக்கு இல்லை. இரண்டாம் பாதியில் வரும் அம்மா செண்டிமெண்ட்,
பிளாஷ்பேக் காதல் தனது சகோதரன் உடனான சண்டை போன்றவை கதையை நகர்த்த துணை புரிந்தது.
இருப்பினும் உணர்ச்சிபூர்வமான சொல்வதற்கு ஏதும் இல்லாதது போன்ற உணர்வே ஓங்கி இருந்தது.
எதோ விக்ரம் அவர்களே கதையை
சுமப்பது போன்று இருந்தது. இதற்கு
ஏற்றார் போல் இன்னோரு விக்ரமும்
வந்து அதையே செய்தார். வில்லன்
கதாபாத்திரம் வலுவாக இல்லாததால் அதையும்
விக்ரமே செய்துவிட்டார் போல. ஆனந்தராஜ் அவர்களின்
நடிப்பு அந்த விசாரணை நடக்கும்
போது விக்ரமுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் நமக்கு கிடைத்த ஆறுதல்,
ரோபோ சங்கர், கே.எஸ்.
ரவிக்குமார் மற்றும் பிற நடிகர்கள்
அவர்கள் பங்கை சிறப்பாக செய்தாலும்,
திரைக்கதையின் சுவாரஸ்ய குறைபாடு, படத்தின் நீளம், தேவையற்ற காட்சிகள்
படத்தின் தரத்தை குறைத்து விட்டது.
டெமோண்டே காலனி படத்தை இயக்கிய
அஜய்யிடம் இருந்து எதிர்பார்த்த விஷயம்
இதில் திருப்த்தி அளிக்கவில்லை. பழைய விக்ரமை பார்ப்பது
போல தான் காட்சியும் கதையும்
இருந்தது. அவரை நன்கு பயன்படுத்தி
நல்ல திரைக்கதையோடு அனைவரும் கொண்டாடும் படமாக எடுத்து இருக்கலாம்.
கணித பாட வகுப்பு போல
சற்று கடினமாக இருந்தது இந்த
கோப்ரா
